டில்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது.
மேலும், உச்சநீதிமன்ற ஊழியர்கள் சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வழக்கு விசாரணையின் போதும் வழக்கறிஞர்கள் முகக்கவசம் அணிந்து வாதிட வேண்டும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.