சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் போராட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாய குறை திருப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு விவசாயிகளும் விவசாயப் பிரதிநிதிகளும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் வந்திருந்தனர்.

ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க காவல்துறை மறுத்தது ஆருரான் தனியார் சக்கர ஆலை அம்பிகா தனியார் சர்க்கரை ஆலை இரண்டு ஆலைகளும் விவசாயிகள் அனுமதி இல்லாமல் விவசாயிகள் பெயரில் வங்கி கடன் பெற்று அதனை திரும்ப கட்டப்படாத காரணத்தால் விவசாயிகளிடமிருந்து கடன் கேட்டு வங்கிகள் துன்புறுத்துகிறது.

விவசாயிகள் இரண்டு கரும்பு சர்க்கரை ஆலைக்கும் கரும்பு கொடுத்த கரும்புக்கான பணம் இதுவரைக்கும் கொடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக பலமுறை அதிகாரியிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அதிக அளவு போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!