சமீப நாட்களாக நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து 3 நாட்களாக கொரோனாவால் வீட்டுதனிமையில் , இருப்போருக்கு காய்ச்சல் இல்லை என்றால், 7வது நாளில் மறு பரிசோதனை செய்யாமல் வீட்டுத் தனிமையை முடித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூச்சு விடுவதில் சிரமம், தொடர் நெஞ்சு வலி, மனக்குழப்பம், மற்றும் கடுமையான சோர்வு இருந்தால் மருத்துவமனையை அணுகவும், 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.