ராஜஸ்தானில் உள்ள உதைப்பூர் மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அந்த நபர் கொரோனாவுக்கு பிந்தைய நிமோனியா மற்றும் சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்போ-தைராய்டிசம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பற்றிருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கடந்த 25ஆம் தேதி கண்டறியப்பட்டது.
தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் உயிரிழந்தார். அவருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய விரிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.