மீன்பிடி தடை காலம் – மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது, இதனையொட்டி, அனைத்து விசைப்படகுகளும் வரும் 14ம் தேதி இரவுக்குள் கரை திரும்பிட வேண்டும் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி நாளை அமலுக்கு வரும் நிலையில், விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 320 க்கும் மேற்பட்ட  விசைப்படகுகள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை என்பதால் சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப்படகுகளை மீனவர்கள் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!