திருப்பதியில் 8,000 பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்…

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வினியோகம் பணி தொடங்கியது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் கவலை அடைந்தனர். இந்த நிலையில், 300 ரூபாய் கட்டணத்தில் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் ஏழுமலையான் கோவிலில் பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாள்தோறும் 8 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனம் செய்யலாம் என கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பதி பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசன் கட்டிட வளாகத்தில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Translate »
error: Content is protected !!