மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு  இலவச லேப்டாப்கள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு இலவச லேப்டாப்கள் வழங்க வேண்டும் என கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 2022-21 கல்வியாண்டில் 5 புள்ளி 32 லட்சம் லேப்டாப்களை அரசு கொள்முதல் செய்தும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அவை வழங்கப்படவில்லை என்றும், விரைவில் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர்பாக ஆதாரங்கள் இல்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்யப் போவதாக மனுதாரரை எச்சரித்தனர். இதையடுத்து மனுதாரர் வழக்கை வாபஸ் பெற முன்வந்ததை அடுத்து, தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Translate »
error: Content is protected !!