வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்வு..!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 அதிகரித்து ரூ.2,234.50 ஆக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரே ஆண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதால், உணவகங்களை நம்பியுள்ள ஓட்டல் பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!