துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தி டெல்லி வந்த கினியா நாட்டு பெண் கைது

கினியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிலிருந்து இந்தியாவுக்குச் சென்றார், இதற்காக முதலில் துபாய் வந்த அவர், பின்னர் வேறு விமானத்தில் டெல்லி சென்றார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று துபாய் புறப்பட்டு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அப்போது பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அவரது பைகளில் ரூ.72 கோடியே 40 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 10 கிலோ கடத்தல் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கினியா நாட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்தப் பெண்ணுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பெண் கடத்தல் சம்பவத்தில் இன்டர்போல் பொலிஸாரின் உதவியுடன் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!