கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் ஆலந்தூர், பெருங்குடி, தரமணி, மீனம்பாக்கம், பரங்கிமலை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், மணலி ராயபுரம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்புத்தூர், மதுரவாயல், வேளச்சேரி, குரோம்பேட்டை, அசோக்நகர், சூளைமேடு, வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.