இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது;
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. மேலும் இது 17ம் தேதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாகவும், தற்போதுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.
குமரிக் கடல், மன்னார் வளைகுடாவில் 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை காற்று வீசும் என்பதால் தமிழக மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.