டெல்லியில் அதிக காற்று மாசு இருக்கும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டது ஏன்..? என டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வேலைக்குச் செல்பவர்கள், வீட்டிலிருந்து வேலை இருந்தே பணியாற்றுமாறு தெரிவிக்கப்பட்டு, மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தியது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.