அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (17ம் தேதி) தீர்ப்பளித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகத் தொடர்கிறார்.
இந்நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, “நான் எப்போதும் பதவிக்காக ஆசைப்பட மாட்டேன்.
சொந்தக் காலில் வருவேன். உழைக்காமல் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பதவி கிடைக்க வேண்டும் என நினைப்பவர் ஓபிஎஸ்” என்றார்.