வாழ்க்கையில் முன்னேற போராடும் இளைஞரை காதலிக்க விரும்புகிறேன் – உலக பிரபஞ்ச அழகி

கடந்த டிசம்பர் 12ம் தேதி இஸ்ரேலில் நடந்த உலக அழகி போட்டியில் பஞ்சாப்பை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து என்ற கல்லூரி மாணவி வெற்றி பெற்றார். அவர் தான் வாழ்க்கையில் போராடும் இளைஞரை காதலிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“நான் ஒரு பணக்காரனை காதலிப்பதை விட வாழ்க்கையில் முன்னேற போராடும் இளைஞரை காதலிக்க விரும்புகிறேன். காரணம், நானும் வாழ்க்கையில் போராடி மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றி பெற்றேன். நான் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் போராட்டம் அவசியம் என்று நான் நம்புகிறேன். அப்போதுதான் நமது சாதனைகளுக்கு நாம் மதிப்பை வழங்க முடியும்.

நான் திரைப்படங்களில் நடித்தால் வழக்கமான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை. பெண்களைப் பற்றி சமூகம் கொண்டிருக்கும் பொதுக் கருத்தை கேள்விக்குள்ளாக்குகிற வலுவான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்றார்.

Translate »
error: Content is protected !!