கர்நாடகாவில் பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து பாலத்தின் மீது சென்ற லாரி கால்வாயில் விழுந்து விபத்துக்குளானது.
பெல்லாரி மாவட்டம் பொம்மனல் கிராமத்தில் உள்ள இந்த கால்வாயை கடக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. பாலம் பழுதடைந்த நிலையில், நேற்று மாலை பாலத்தின் மீது காய்கறி ஏற்றி வந்த லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் வாகனம் கால்வாயில் விழுந்ததில் டிரைவர் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் போராடி வாகனத்தை கால்வாயில் இருந்து வெளியே எடுத்தனர்.