அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி நாளை மறுதினம் (2ம் தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென்கிழக்கு, மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளிலும் பலத்த சூறாவளி புயல்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 30ம் தேதி (இன்று) முதல் இந்த கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 30ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.