நரிக்குறவர் குடும்பத்தை பஸ்ஸில் இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள்: இப்படி ஆட்சி நடக்கும்போது இது கவலை அளிக்கிறது – கனிமொழி ட்வீட்

நரிக்குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து திமுக எம்பி கனிமொழி ட்விட்டர் பதிவில்,

சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூக நீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!