மாஸ்டர் பட தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாண்டு வருவதால் சோதனை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் செல்போன் நிறுவனங்கள் மற்றும் உதரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை நடத்தப்படுகிறது. மாஸ்டர் பட தயாரிப்பாளரும், நடிகருமான விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.