பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 10 ஆம் தேதி வெளியான நிலையில்  நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலை மத்திய அரசால் உயர்த்தப்பட கூடும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு வந்த நிலையில் சுமார் 137 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 76 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!