இந்தியா 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை.. உலக சுகாதார அமைப்பு பாராட்டு

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தியதற்கு , உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் இந்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதை பற்றி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

கொரோனவிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், தடுப்பூசி இலக்குகளை அடையவும் பெரும் முயற்சி எடுத்து வரும் பிரதமர் நரேந்திரமோடி, விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!