ராணுவ நாளையொட்டி வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்

ராணுவ நாளையொட்டிப் போர்க்களத்தில் ராணுவ வீரர்களின் துணிச்சலான செயல்கள், போர்க்கருவிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை கையாளும் விதம் குறித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

இது பல்வேறு நிலங்கள் மற்றும் காலநிலைகளிலும் ராணுவத்தினர் பணியாற்றுவதுடன், மேலும் பீரங்கி, ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணை ஏவும் கருவிகளை இயக்குவதும் அதில் இடம் பெற்றுள்ளது.

போர்க்களத்தில் விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் இறங்குவது, போர்க்களத்தை அடையும் கப்பல்கள் உள்ளிட்ட காட்சிகள் ராணுவத்தினரின் துணிச்சலான அர்ப்பணிப்புப் பணியை பொதுமக்களுக்கு விளக்குகிறது.

Translate »
error: Content is protected !!