இலங்கை மீனவர்களால் ஒவ்வொரு முறை தாக்கப்படும் போது மட்டும் இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களாக மாறிவிடுகிறார்கள் என திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றம்சாட்டினார்.
சென்னை நந்தனத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவமனையை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், சக்கரை நோயை கவனம் எடுத்து கவனித்து கொள்வது போல மக்கள் உயர் ரத்த அழுத்தத்தையும் கவனித்து கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இலங்கை மீனவர்களால் ஒவ்வொரு முறை தாக்கப்படும் போது மட்டும் இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களாக மாறி விடுகிறார்கள் எனவும் மீனவர்கள் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் முக. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றார்.