மீனவர்களை இந்திய கடற்படை கமடோர் நேரில் பார்வையிட்டு விசாரணை

நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இந்திய கடற்படை கமடோர் விஷால் குப்தா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளார்.

கடந்த 21ஆம் தேதி மன்னார் வளைகுடா சர்வதேச எல்லையில் பகுதியில் விசைப்படகு மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் தரங்கம்பாடியை சேர்ந்த வீரவேல் என்பவர் துப்பாக்கி குண்டு துளைத்து படுகாயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த வீரவேல் மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருடன் மீன்பிடித்த ஒன்பது சக மீனவர்கள் தற்போது நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இந்திய கடற்படை கமடோர் விஷால் குப்தா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Translate »
error: Content is protected !!