காஷ்மீர் துலிப் தோட்ட திறப்புக்கான பணி தீவிரம்

 

காஷ்மீரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டத்தில் விடுமுறை கால திறப்புக்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காஷ்மீர் மாநிலத்துக்கு உள்ள பல்வேறு சிறப்பம்சங்களில் தூலிப் மலர் தோட்டமும் ஒன்று. அங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும் தூலிப் மலர் தோட்டம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக இத்தோட்டம் திறக்கப்படுவது வழக்கம். 12 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த தோட்டத்தில் வண்ண வண்ண தூலிப் மலர்களை நடடு செய்து தயார் படுத்துவர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விடுமுறை கால திறப்புக்கான பணி படுதீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!