உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கட்சி தலைவர்கள், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல முயன்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். சிதாபூரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், லக்கிம்பூர் கேரி மற்றும் சீதாபூர் பகுதிகளில் இணைய சேவைகள் முடங்கியுள்ளன. மேலும் இணைய சேவை முடங்கியிருப்பது எந்த அதிகார பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையில், இன்று இன்று லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்கு செல்ல உள்ள ராகுல் காந்தி, சீதாபூர் சென்று அவரது சகோதரி பிரியங்கா காந்தியை சந்திக்க உள்ளார். ஆனால் ராகுல் காந்தி லக்கிம்பூர் வர மாநில அரசு அனுமதிக்க மறுத்துவிட்டது.