இந்தியாவில் முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை இன்று (நவம்பர் 1), ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில் வெளியிடுகிறது. இதற்கு டிஜிட்டல் ரூபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் மூலமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது.