இந்தியாவில் ஐபோன் 13 மொபைல் விற்பனை தொடக்கம்

ஐபோன் 13 மொபைல் விற்பனை இன்று இந்தியாவில் தொடங்கியுள்ளது.

புதுடெல்லி,

ஐபோன் நிறுவனம் புதிய மொபைல் ஐபோன் 13ஐ கலிபோர்னியா ஸ்ட்ரீமிங் என்ற நிகழ்ச்சியின் போது அறிமுகப்படுத்தியது. புதிய ஐபோன் 13, உலகளவில் விற்பனை செய்யத் தொடங்கிய நிலையில் இன்று முதல் இந்தியாவில் விற்பனை தொடங்குகிறது.

இந்தியாவில், ஐபோன் 13 மினி மாடல் விலை 69,900 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மேலும், IPhone 13 Pro Max விலை ரூ. 1,79,900 வரை விற்பனைக்கு வருகிறது.

இந்த புதிய மாடல் ஐபோன் வாங்க நினைப்பவர்கள் உங்கள் பழைய மொபைலை பரிமாற்றம் செய்து வாங்கும் வசதியும் ஐபோன் நிறுவனம் வழங்குகிறது. ஐபோன் மொபைல் மட்டும் இல்லாமல் ஆண்ட்ராய்டு போனையும் பரிமாற்றம் செய்து வாங்கும் வசையையும் ஐபோன் நிறுவனம் வழங்கியுள்ளது.

Translate »
error: Content is protected !!