அமெரிக்காவில் இதுவரை 50.5 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா (Moderna),பைசர்/பையோஎன்டெக் ( Pfizer / Biontech )மற்றும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) ஆகிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. அந்த வகையில், அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 50,50,13,980 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் இதுவரை 24,28,13,374 பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது என்றும், 20,54,20,745 பேர் 2 டோஸ் தடுப்பூசியைப் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களால் இதுவரை சுமார் 6.7 கோடி பேருக்கு 3வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!