“ஜெய் பீம்”… விருது கிடைத்தால் அது விருதுக்கே பெருமை – நடிகர் சூரி

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் “ஜெய் பீம்”. இப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

‘ஜெய் பீம்’ படத்தை பார்த்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெய்பீம் படமல்ல, பாடம்; விருது கிடைத்தால் அது விருதுக்கே பெருமை என நடிகர் சூரி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை என்று பதிவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!