திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 89ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள கி.வீரமணியின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கவிஞர் வைரமுத்து ஆகியோர் முதலமைச்சருடன் சென்று கி.வீரமணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு கி.வீரமணி அவர்கள் அனைவருக்கும் புத்தகத்தை வழங்கி நன்றி கூறினார்.