நாடு முழுவதும் கர்வா சவுத் விரதம் கொண்டாடப்பட்டது

கணவரின் நலன் வேண்டி பெண்கள் அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. கர்வா சவுத் விரதம் அன்று பெண்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து பின்னர் கணவனை அச்சல்லடை வழியாக பார்ப்பார்கள்.

இதனால் அவர்களுடைய மாங்கல்ய பலம் கூடும் என்பது வழிவழியாக வந்துள்ள நம்பிக்கை. இதனை பொதுமக்கள் மட்டுமின்றி மத்தியப்பிரதேசம், உத்திராக்கண்ட் முதலமைச்சர்களின் மனைவிகளும் கடைபிடித்தனர். போபால் நகரில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகாரின் மனைவி, சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து பின்னர் கணவர் காலை தொட்டு வணங்கினார்.

இதேபோன்று உத்திராக்கண்ட் முதல்வர் புஸ்பர் சிங் தாமியின் மனைவியும், கர்வா சவுத் விரதம் கடைபிடித்து கணவரை வணங்கினார். வடமாநிலங்களில் கர்வா சவுத் விரதம் வெகு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் காரடையான் நோம்பாக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. சம்பத் கவுரி விரதம், காமாட்சி நோம்பு, சவுத்ரி விரதம், சுமங்கலி நோம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் மூலம் கணவன், மனைவி இடையே ஒற்றுமையும், மாங்கல்ய பலமும், நீண்ட ஆயுள், ஆரோக்கிய ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

Translate »
error: Content is protected !!