கடும் பனிப்பொழிவால், கேதர்நாத் கோயில் வெண் நிறத்தில் அழகாக காட்சியளிக்கிறது. உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் புனித யாத்திரையாக செல்வதுண்டு.
அந்தவகையில் நடப்பாண்டு கேதர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தினந்தோறு ஏராளமானோர் சிவாலயத்தில் தரிசனம் செய்து வந்த நிலையில், தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக அப்பயணத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் பயங்கரவாத அச்சுறுத்தலால் அங்கு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வெண் பனியால் மூடப்பட்ட கேதர்நாத் கோயில், ரம்மியமாக காட்சியளிக்கிறது.