கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளாவின் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதாக கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்று கேரள வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மீனவர்கள் அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!