அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது,
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சி தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஏற்பது மக்களின் விருப்பம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படையில் கட்சி சிறப்பாக செயல்படுகிறது.
அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் கூறி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.