குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், காற்றழுத்தம் மாறும்போது மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கலாம். தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலை வேளையில் சற்று குறைவாக இருந்தாலும், பிற்பகலில் மழை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பாத்த மழை இன்னும் பெய்யவில்லை. எனினும் அனைத்து இடங்களிலும் படகுகள் தயார் நிலையில் உள்ளது, மழை பெய்தால் உணவு வழங்க தயாராக உள்ளோம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!