மத்திய பிரதேச கோதுமைக்கு மண்டி வரி விதிக்கப்படாது

மத்திய பிரதேசத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமைக்கு மண்டி வரி விதிக்கப்படாது என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

உலகின் மொத்த கோதுமை தேவையில் 30 சதவீத பங்களிப்பை உக்ரைன் மற்றும் ரஷ்யா வழங்கி வந்த நிலையில் போர் காரணமாக அந்நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி பாதிப்பைந்துள்ளது.

இதனால் கோதுமை தேவைக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யா-வை நம்பியிருந்த நாடுகள் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள இந்தியாவை நாட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கோதுமை ஏற்றுமதியை எளிதாக்கும் வகையில் ஏற்றுமதியாளர்கள் நேரடியாக மண்டிகள் அல்லது விவசாயிகளிடமிருந்து கோதுமையை கொள் முதல் செய்து கொள்ளலாம் என்றும் ஏற்றுமதி செய்யப்படும் கோதுமைக்கு மண்டி வரி விதிக்கப்படாது எனவும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

மேலும் ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!