மனைவியின் விருப்பமின்றி கணவன் உறவு கொண்டால் அது பாலியல் குற்றமாக கருதப்படும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் உறவு கொண்டால், அதை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது’ என, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின், 375வது பிரிவு கூறுகிறது.
இந்த நிலையில் கணவர் தன்னை பாலியல் அடிமையாக நடத்துவதாக பெண் ஒருவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.நாகபிரசன்னாவின் ஒற்றை நீதிபதி கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியான நிலையில் மனைவியின் மீது மிருகத்தனமான பாலியல் வன்புணர்வை கட்டவிழ்த்து விடுவதற்கு திருமணம் ஒன்றும் உரிமம் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள் மனைவியின் விருப்பமின்றி கணவன் உறவு கொண்டால் அது பாலியல் குற்றமாக கருதப்படும் என தீர்ப்பளித்துள்ளார்.