உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகள் தொடர்பாக சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்காமலும், சுழற்சி முறை மாற்றம் அளிக்காமலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். பிற்றபடுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை புறக்கணித்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்து இருப்பது சட்ட விரோதம். சமூக நீதிக்கு எதிரான மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மழைக்காலம், புதுச்சேரி விடுதலை நாள், கல்லறைத் திருநாள், தீபாவளி திருநாள் போன்ற திருவிழாக் காலங்களின் இடையில் தேர்தல் நடத்துவது நடைமுறைக்கு விரோதமானது. தன்னிச்கையாகவும் விரோதமாகவும் முடிவுகளை எடுக்கும் சட்ட மாநிலத் தேர்தல் ஆணையர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.