சிவகாசி காமாட்சி அம்மன் கோவில் திருவிழா கொண்டாட்ட அதிசயம்!

 

சிவகாசி அருகே விருதுநகர் ஒன்றியம் காரிசேரி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் பெத்து செட்டிபட்டி. இங்குள்ள பழமைவாய்ந்த காமாட்சி அம்மன் கோவிலை ஒரு சமுதாயத்தினர் தங்களது குலதெய்வமாக ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர். 3 வருடங்களுக்கு முறை நடத்தப்படும் இத்திருவிழா கொ டையின் போது காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன், பூஜைகள் செய்து உடைக்கப்படும் தேங்காய்ஒன்றை குங்குமம்இட்டு, மலர்களுடன்அம்மன் பாதத்தில் வைத்து வணங்கி வழிபட்ட பின்பு, கோவிலை cபூட்டுப் போட்டு பூட்டி விடுகின்றனர்.

பின்பாக மறுமுறை 3 வருடங்கள் கழித்து திருவிழா எடுக்கும் சமயத்தில் பூட்டப்பட்டிருந்த கோவிலை மீண்டும்  திறக்கும் போது தேங்காய் அழுகல் இன்றி, மலர்களும் வாடாமல் இருக்கும் அதிசயம் நிகழ்கிறது. இந்த அதிசய நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து காமாட்சி அம்மனை குலதெய்வமாக வழிபடும் இந்த சமுதாயத்தினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு விடுவது வழக்கமான ஒன்றாகும்.

பூட்டப்பட்ட கோவிலைத் திறந்து கெட்டுப் போகாமல் இருக்கும் தேங்காயை தாம்பாளத்தில்வைத்து, வெண்குடைபிடித்து, பக்தர்கள் பலர் பால்குடம்எடுத்து, மேளதாளத்துடன், பட்டாசுகள் வெடித்து, ஊர்வலமாக சென்று மீண்டும் காமாட்சி அம்மனுக்கு படையலாக படைத்து பாலா அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனையுடன் வணங்கி வழிபாடு நடத்தினர்.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கொடையின் போது பங்கேற்கும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற காமாட்சி அம்மனுக்கு தங்களது பல்வேறு நேர்த்திக் கடன்களையும் செலுத்தி அம்மனை வணங்கி வழிபாடு செய்தனர்.

 

Translate »
error: Content is protected !!