சி.என். ஒ.எஸ். ஒபினியோம் அமைப்பு நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மிகவும் மக்கள் செல்வாக்கு மிக்க முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். இதில் 5 முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிடித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 3 வது இடத்தில் உள்ளார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 4 வது இடத்திலும், அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா சர்மா 5 வது இடத்திலும் உள்ளனர்.