ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு 4-வது முறையாக பரோல் நீட்டிப்பு

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினிக்கு 4-வது முறையாக பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக 26 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் நளினி, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை கவனித்துக்கொள்ள விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி பரோல் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 முறை தலா ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றுடன் அவருக்கு விடுப்பு முடியும் நிலையில், 4-வது முறையாக அடுத்த மாதம் 25ஆம் தேதி வரை பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!