முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு ராணுவ தலைமை தளபதி எம்.என். நரவானேவின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய முப்படைகளையும் அதன் பிற துறைகளையும் வழிநடத்தும் ஒரே தலைமைத் தளபதி பதவியை பிரதமர் மோடி உருவாக்கினார். அந்த பதவிக்கு நியமிக்கப்படும் உயரதிகாரி, நான்கு ஸ்டார்களுக்கான தகுதி வாய்ந்த ஜெனரல் ஆக இருப்பார் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி முதல்முறையாக முப்படைகளுக்குமான ஒரே தளபதியாக பிபின் ராவத் 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்ததை தொடர்ந்து அப்பதவிக்கு ராணுவ தலைமை தளபதி எம்.என். நரவானேவின் நியமிக்கப்பட்டுள்ளார்.