பிரான்சில் ஒமைக்ரானை விட அதிகம் பரவக்கூடிய புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 10 ஆம் தேதி, மத்திய ஆபிரிக்க நாடான கேமரூனில் இருந்து வந்த பயணி ஒருவருக்கு முதன்முறையாக உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது, மேலும் அவருடன் தொடர்பில் இருந்த மார்சேயில்ஸ் பகுதியைச் சேர்ந்த 12 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த உருமாறிய கொரோனாவுக்கு IHU B.1.640.2 என்று பெயரிட்ட விஞ்ஞானிகள், இந்த வகை தொற்று 46 உருமாற்றங்களை கொண்டது மற்றும் ஒமைக்ரானை விட அதிக வீரியமிக்கதாக இருக்கக் கூடும் என்று கூறியுள்ளனர். மற்ற நாடுகளில் இந்த வகை தொற்று இன்னும் கண்டறியப்படாத நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.