நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், கொரோனா உச்சத்தில் இருந்தபோது விதிக்கப்பட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சில கட்டுப்பாடுகள் மட்டுமே இருந்து வருகின்றன.
அந்த வகையில், கர்நாடகாவில் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவின்படி, மாநிலத்தில் அமலில் இருந்த இரவு ஊரடங்கு (இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) ரத்து செய்யப்பட்டுள்ளது.