தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என தகவல்

தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுதொடர்பான தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மதியம் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவுக்கு வாய்ப்பில்லை என முதல்வருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

* நோய்த்தொற்று 10% ஐ நெருங்கினால் ஊரடங்கு உத்தரவை அறிவிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது.

* சுகாதாரத் துறையில் ஒப்பந்தப் பணியாளர்களின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்கவும் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.

*தீவிர அவசரகால கட்டுப்பாட்டு மையங்களை மீண்டும் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

Translate »
error: Content is protected !!