கொரோனாவிலிருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் தோன்றி மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறியது,
“தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 11 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் சோதனையின் முடிவில் கொரோனா இல்லை என்று முடிவு செய்யப்பட்டாலும், அவர்கள் தங்கள் வீடுகளை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். கொரோனா பரிசோதனைக்கு பணம் செலுத்த முடியாத பயணிகளுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும். ஒமேக்ரான் பாதிப்பு இன்னும் தமிழகத்திற்குள் வரவில்லை. என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளார்.