கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா.. எல்லையில் தீவிர கண்காணிப்பு

கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து பரிசோதனையில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவை சரிபார்த்த பிறகே தமிழகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!