ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி இந்தியாவிலும் பரவி வருகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஒமைக்ரான் வைரஸால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.