இணையங்களில் முன்பதிவு செய்து நெல் விற்பனை செய்யலாம்

விவசாயிகள் குறுவை நெல்லை பழைய நடைமுறையிலும் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மத்திய அரசின் உணவுத்துறை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் உழவர்கள் பயன்பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இணையவழி பதிவு முறையை அக்.1-ம் தேதி முதல் செயல்படுத்த கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, விவசாயிகள் 2021-22 காரீப் சந்தை பருவம் தொடங்கும் முன்பு அக்.1-ம் தேதி முதல் தங்கள் பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் நாளை தெரிவித்து முன்பதிவு செய்து, நெல்லை விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் உழவர்கள் தாங்கள் விரும்பும் வகையில் இணைய வழியிலோ, ஏற்கெனவே இருந்த நடைமுறையிலோ நெல்லை விற்பனை செய்யலாம் என அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!