திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா

 

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பங்குனித் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான சுப்ரமணியசுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையும் சுப்பிரமணிய சுவாமி –  தெய்வானை திருக்கல்யாண விழா  திங்கட்கிழமையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதைத்தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க கோவில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேர் புறப்பட்டு சென்றது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 

Translate »
error: Content is protected !!